நவம்பர் மாதம் எந்திரன் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் தரப்பு இந்த செய்தியை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் நேரடியாக தயாரித்து வருகிறது. இதுதவிர சுறா, சிங்கம் போன்ற படங்களின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இந்தப் படங்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக சன் பிக்சர்ஸ் தரப்பு இவற்றின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளதாம்.
விஜய்யின் சுறா வரும் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து சூர்யா நடிப்பில் ஹரி இயக்கியிருக்கும் சிங்கம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது. ஜூலை 10ஆம் தேதி ஜெயம் ரவியின் தில்லாலங்கடி. ஆகஸ்டு 15 தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ஆடுகளம். அக்டோபர் 10ஆம் தேதி மீண்டுமொரு தனுஷ் படம், மாப்பிள்ளை.
இந்தப் படங்களுக்குப் பிறகு நவம்பர் மாதம் 5ஆம் தேதி எந்திரனை திரைக்கு கொணடுவர சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளதாம்.
இந்த ரிலீஸ் தேதிகளை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.