இந்தியாவின் கார் உற்பத்தியில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ஐ20 ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்துடன் எர்ரா, ஸ்போர்ட்ஜ் என்ற இரண்டு புதிய ரக கார்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எர்ரா ரக காரின் விலை டெல்லியில் ரூ.4,51,816.
ஸ்போர்ட்ஜ் ரக காரின் விலை ரூ.5,31,817.
இதில் எர்ரா ரக கார் பெட்ரோல், டீசலில் இயங்கும் இரண்டு ரகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கார்கள், சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ள பாரத் 4 மாசு கட்டுப்பாடு விதிகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஹூன்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ20 ரக டீசல் காரில், இது வரை எந்த காரிலும் இல்லாத ஆறு கியர் அமைப்பு உள்ளதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது.






0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.