மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> IPL 3 இடத்திற்கு 5 அணிகள் போட்டி

ஐ.‌பி.எ‌ல். ‌கி‌ரி‌க்கெ‌ட் போ‌ட்டி‌யி‌ல் 3 அரை‌யிறு‌தி இட‌த்‌தி‌ற்கு பெங்களூர், டெல்லி, டெக்கான், கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகள் மல்லுக்கட்டி நிற்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்னும் மூன்று லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இ‌ந்த ‌லீ‌க் ஆ‌ட்ட‌ங்க‌ளி‌ல் சென்னை அ‌ணி பஞ்சாப் அ‌ணியுடனு‌ம், டெக்கான் அ‌ணி டெல்லியுடனு‌ம், கொல்கத்தா அ‌ணி மும்பையுட‌ன் மோது‌கி‌ன்றன.

அப்படி இருந்தும் மும்பை அணி மட்டுமே இதுவரை அரைஇறுதியை உறுதி செய்திருக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.

மற்ற 3 அரைஇறுதி இடத்திற்கு பெங்களூர், டெல்லி, டெக்கான், கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகள் மல்லுக்கட்டி நிற்கின்றன. இவற்றில் டெல்லி-டெக்கான் மோதலில் வெற்றி பெறும் ஒரு அணி சிக்கலின்றி உள்ளே நுழைந்து விடும்.

சென்னை பஞ்சாப்பையும், கொல்கத்தா மும்பையும் வீழ்த்தினால் மற்ற இரு அரைஇறுதி இடத்தையும் 'ரன்-ரேட்' தான் தீர்மானிக்கும்.

அதே சமயம் இவ்விரு அணிகளும் தங்களது கடைசி லீக்கில் தோற்று விட்டால் ரன்-ரேட் அவசியம் இருக்காது.

பெங்களூர் மற்றும் டெக்கான்-டெல்லி ஆட்டத்தில் தோல்வியுறும் அணிகள் தலா 14 புள்ளிகளுடன் அரைஇறுதியை எட்டி விடும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.