
ஐ.பி.எல். பணம் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்று இருப்பதும் அதில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள், அயல்நாட்டு ஆட்டக்காரர்கள் உள்பட 27 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளின் முடிவை தீர்மானிக்கும் வரை, ஒவ்வொரு போட்டியின் போது சுமார் 500 கோடி ரூபாய் சூதாட்டம் நடைபெற்று இருப்பதும் வருமானவரித்துறையினர் கைப்பற்றியுள்ள ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ள வீரர்களிடமும், அணியின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.