ஹாலிவுட் பாணியில் ஒருவர் படமெடுக்க, இன்னொருவர் விளம்பரப்படுத்த, மூன்றாமவர் விநியோகிக்கும் முறை அமலுக்கு வந்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் உருவாக்கிய இந்த பாணியை ரெட் ஜெயண்ட, கிளவுட் நைன் ஆகியவை முன்னெடுத்துச் செல்கின்றன.
இந்த புதிய வியாபார முறையை நம்பி படமெடுத்து வருகிறவர்களில் கருணாஸும் ஒருவர். இவர் முதல்முறை ஹீரோவாக நடித்த திண்டுக்கல் சாரதியின் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியது. அபிரிதமான விளம்பரங்களால் இந்த மிகச் சாதாரணப் படம் லாபம் ஈட்டியது.
இந்த வெற்றியால் அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தை தொடங்கி முடித்தும்விட்டார் கருணாஸ். படத்தில் இவர்தான் நாயகன். அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதன் அம்பானி போல் ஆகும் கனவுடன் சென்னைக்கு வருகிறான். தடைகளைத் தாண்டி தனது கனவை அவன் வென்றெடுத்தானா என்பது கதை.
கதை கத்திரிக்காயைவிட படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கும் என்ற நம்பிக்கையில்தான் எடுத்து வருகிறார் கருணாஸ். அவரது நம்பிக்கைக்கு உறுதி சேர்க்கும் விதத்தில் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவும் பச்சைக் கொடி அசைத்திருக்கிறார்.
“திண்டுக்கல் சாரதி பட்ஜெட் இரண்டரை கோடி. படம் வசூலித்தது பதினான்கு கோடி. அதேபோல் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தையும் சன் பிக்சர்ஸ் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறது. கலாநிதி மாறன் நிச்சயம் ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் சக்சேனா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.