ஐ.சி.சி.யின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலப் பயணத்திட்டத்தில் இந்திய உள் நாட்டு கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு தனி சாளரம் கொடுக்க இயலாது என்று ஐ.சி.சி. தலைவர் லோர்கட் தெரிவித்துள்ளார்.
"ஐ.பி.எல். ஒரு உள் நாட்டு கிரிக்கெட் தொடர் இதனால் அதற்கென்று பிரத்யேக காலக்கட்டத்தை ஒதுக்கும் திட்டம் இல்லை. அனைத்து உள் நாட்டு கிரிக்கெட் தொடருக்கும் சாளரம் கொடுப்பது கடினம். எதிர்காலப் பயணத்திட்டம் என்பது சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு மட்டுமே, மேலும் ஐ.பி.எல். நிர்வாகக் குழு தனியான சாளரம் கேட்கவில்லை." என்றார் லோர்கட்.
"இருபது ஓவர் கிரிக்கெட் ஒரு புதிய சந்தையை உருவாக்கியுள்ளது என்பது உண்மைதான் ஆனால் அதற்காக மற்ற இரண்டு வடிவங்களை ஒதுக்கி விட முடியாது.
ஒரு நாள் கிரிக்கெட் கடந்த சில மாதங்களாக சிறந்த போட்டிகளை சந்தித்து வருகிறது. சச்சின் டென்டுல்கர் 200 ரன்களை எடுத்தார். இதனால் 50 ஓவர் கிரிக்கெட் நிச்சயம் நீடிக்கும். ஆனால் இந்த வடிவங்களை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பது முக்கியம்." என்று கூறினார் லோர்கட்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.