மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஞ்சிதாவை மன்னித்த மணிரத்னம்

மணிரத்னத்தின் ராவண் படத்தில் விக்ரம், ப்‌ரியாமணி, பிருத்விரா‌ஜ் போன்ற இளைய தலைமுறை மட்டுமின்றி கார்த்திக், ரஞ்சிதா போன்ற சீனியர்களும் நடித்திருந்தனர். இதில் ரஞ்சிதா விக்ரமின் முறைப் பெண்ணாக சில காட்சிகளில் வருகிறார். படத்தைப் பொறுத்தவரை முக்கியமான கதாபாத்திரம்.

நித்யானந்தர் விவகாரத்தில் ரஞ்சிதாவின் பெயர் மோசமான முறையில் டேமே‌ஜ் ஆனதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க மணிரத்னம் முடிவு செய்தார்.

தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் ரஞ்சிதாவுக்கு இது மேலும் அதிர்ச்சியை அளித்தது. அவர் மணிரத்னத்தை தொடர்பு கொண்டு தன்னை படத்திலிருந்து நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதுடன் தனது இக்கட்டான சூழலையும் எடுத்துரைத்திருக்கிறார்.

இந்த விளக்கத்துக்குப் பிறகு, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்குவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் மணிரத்னம். ரஞ்சிதா மீது தமிழகத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதால் கேரளாவில் வைத்து அவர் சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளை எடுக்கயிருக்கிறார்கள்.

பாலியல் புகார் காரணமாக ரஞ்சிதா கார்னர் செய்யப்படும் இந்த வேளையில் மணிரத்னம் தனது மனதை மாற்றிக் கொண்டது எல்லா வகையிலும் வரவேற்கத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.