கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் முதலீடு அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை விற்க முடிவெடுத்துள்ளதாக அந்த அணியின் சக உரிமையாளரான மோஹித் பர்மன் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
"நல்ல ஒப்பந்தம் படிந்தால் நாங்கள் அணியைக் கொடுக்கத் தயாராக உள்ளோம். ஆனால் இப்போதைக்கு ஒருவரும் முன்வரவில்லை." என்று மோஹித் பர்மன் தெரிவித்துள்ளார்.
இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகளுக்காக நடந்த ஏலத்தில் வீடியோகான் நிறுவனம் கடும் போட்டியிட்டு தோல்வியடைந்தது. தற்போது பஞ்சாப் அணியை வாங்க பேரம் செய்வதாகத் தெரிகிறது.
அதாவது விற்பனை மதிப்பு 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே பேரம் படியும் என்று கூறப்படுகிறது.
"தற்போது ஒரு அணியை 370 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்க முன்வருகின்றனர். நாங்கள் கூறுவது 250 மில்லியன் டாலர்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் இதனால் வாங்கலாம். ஆனால் இதுவரை ஒருவரும் முன்வரவில்லை." என்று கூறும் மோ0ஹித் பர்மன், டாபர் நிறுவனத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நஸ்ரு வாடியக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த செய்தி தவறு என்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சக உரிமையாளர்களாக நெஸ் வாடியா , மோஹித் மற்றும் கௌரவ் பர்மன், கரன் பால்,பிரீஇத்தி ஜிந்தா ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழுமம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துவக்க ஏலத்தில் 76 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.