மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பாடும் மீரா நந்தன்

ஜி.வி. பிரகாஷ் இசையில் ஒரு படத்தில் பின்னணி பாடப் போகிறார் மீரா நந்தன். ஜி.வி. ஏற்கனவே நடிகைகள் மம்தா, ஆண்ட்ரியா, நடிகர் தனுஷ் ஆகியோரைப் பாடவைத்தவர். அந்த வகையில் மீரா நந்தனும் பாடகியாக இன்னொரு அவதாரம் எடுக்கிறார்.

முறைப்படி சங்கீதம் பயின்ற இவர் நடிகையாகாவிட்டால் சிறந்த பாடகியாக வலம் வந்திருப்பேன் என்கிறார். அதனால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சிறந்த மெலடி பாடல்களை தேர்வு செய்து பிராக்டிஸ் செய்து வருகிறார்.

இவரின் ஆர்வம் அறிந்த விஜய் ஆண்டனியும் ஒரு படத்தில் பாட வைப்பதற்காக குரல் டெஸ்ட்டும் எடுத்திருக்கிறாராம். யார் இசையில் முதலில் பாடப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.