மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> குரு சிஷ்யன் - விமர்சனம்

ரசிகர்களின் ஆரோக்கியமான ரசனையை வளர்த்துக் கொள்வது போல படங்கள் எடுப்பது ஒருவகை. மலிவான ரசனையை நம்பி அதற்கு தீனி போட்டு கல்லாவை நிரப்ப முயற்சிப்பது இன்னொரு வகை.

ஷக்தி சிதம்பரத்தின் குரு சிஷ்யன் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. இப்படிதான் படம் எடுக்கப் போறோம் என்பதில் உறுதியாக இருந்ததால் பச்சை வசனங்கள், நீல காட்சிகள், மஞ்சள் அவயங்கள் என கலர் கலராக நாறடிக்கிறார்கள்.

சத்யராஜும், சரண்யாவும் கணவன் மனைவி. ஆனால் மனைவியையும் அவரது குடும்பத்தையும் ஒருவேளை கஞ்சி குடிக்ககூட விடாமல் துரத்தி துரத்தி அடிக்கிறார் சத்யரா‌ஜ். இதற்கொரு பிளாஷ்பேக்கும் இருக்கிறது.

அடாவடி சத்யராஜுக்கு அல்லக்கையாக வந்து சேர்கிறார் சுந்தர் சி. சரண்யாவை துரத்தியடிக்கும் திருப்பணியில் சத்யராஜுடன் பங்குகொள்ளும் இவர் இடைவேளையில் சரண்யாவுக்கு ஆதரவாக டுவிஸ்ட் அடிக்கிறார். சரண்யா சுந்தர் சி.யின் உடன்பிறந்த அக்கா. இது அந்த அக்காவுக்கே தெ‌ரியாது.

இதற்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அக்காவை உங்ககூட சேர்த்து வைக்கதான் உங்ககிட்ட சிஷ்யனா சேர்ந்தேன், அதை கண்டிப்பா சாதிப்பேன் என்று சுந்தர் சி. சத்யராஜுக்கு சவால் விடுகிறார். சவாலில் எப்படி ஜெயித்தார் என்பது மீதி கதை.

பாட்டி வடை சுட்ட கதையைவிட அரத பழசான காட்சிகள். அதைவிட பழசான வசனங்கள். ஆக்சனில் அடியாட்கள் ட்யூப் லைட்டை உடைக்கிறார்கள். டூயட்டில் ஹீரோயின் கடலில் வெள்ளை ட்ரெஸ்ஸில் குளிக்கிறார். காமெடியில் காதலிக்குப் பதில் மாமியாரை ஹீரோ கட்டிப் பிடிக்கிறார்.

சந்தானம் ஏ‌ரியாவையாவது சகித்துக் கொள்ளலாம் என்றால் அதிலும் காமநெடி. ஷகிலாவை வைத்து ஒரு காட்சி செய்திருக்கிறார்கள். ஆபாசத்தின் உச்சபட்சம். கிளைமாக்ஸில் தேவையில்லாமல் ஒரு புலி வருகிறது. ‘புலி’ யை கிண்டலடிப்பதாக இயக்குனர் நினைத்தால் அய்யோ பாவம்.

இசை, ஒளிப்பதிவு பற்றி சொல்ல எதுவுமில்லை. ஊசிப்போன சாப்பாட்டை இலையில் போட்டால் என்ன தரையில் போட்டால் என்ன?

குரு சிஷ்யன் - கூவம் பக்கமாக போன ஃபீலிங்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.