மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்க்கு திருமணம்

சென்னை 28, நாடோடிகள் படத்தில் நடித்தவர் விஜய். நாலில் ஒருவராக நடித்துக் கொண்டிருந்தவர் இப்போதுதான் தனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த புரமோஷனுக்கு அழகான காரணம் ஒன்றை சொல்கிறார் விஜய்.

நேற்றைய பத்தி‌ரிகையாளர் சந்திப்பில் முகமெல்லாம் வெட்கத்துடன் அவர் சொன்னது, மனைவி வரப்போற ராசி சார்.

ஆமாம், விஜய்க்கு வருகிற 19ஆம் தேதி திருமணம். மணமகள் பெயர் நித்யா. மண்டபம் கொள்ளாத அளவுக்கு ஆட்கள் வருவார்கள் என்பதால் திருமணத்தை சென்னை காமராஜர் அரங்கில் வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் கும‌ரி அனந்தன் தாலி எடுத்துக் கொடுக்க மங்கல நாண் பூட்டுகிறார் விஜய்.

கும‌ரி அனந்தன் விஜய்யின் தந்தை வசந்தகுமார் எம்எல்ஏ-வின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.