கலைஞர்களின் கோபம் நாரதர் கலகம் மாதிரி நன்மையில்தான் முடியும். சித்திரம் பேசுதடி படத்துக்குப் பிறகு நந்தலாலாவை இயக்குவதாக இருந்தார் மிஷ்கின். தயாரிப்பாளர் அமையாதது, நடிகர்கள் கிடைக்காதது என பல தடங்கல்கள். இதனால் கோபமானவர் எடுத்தப் படம்தான் அஞ்சாதே.
ஆனால் இப்போது மிஷ்கின் காட்டும் கோபம் நன்மையில் முடியும் போல் தெரியவில்லை.
கமல் மிஷ்கினை அழைத்துப் பேசியதும், மிஷ்கின் கமலுக்காக கதை தயார் செய்ததும், சில காரணங்களால் அந்தப் படம் டேக் ஆஃப் ஆகாமல் ஆஃப் ஆனதும் அனைவருக்கும் தெரியும். இதுபற்றி கேட்டால், நான் இப்போ ஹேப்பியா இருக்கேன். இது மாதிரி சின்னப் படங்கள் செய்தால் போதும், அதுதான் திருப்தி என்று நாசூக்காக பேசுவதாக நினைத்து கமலை வாரி விட்டுள்ளார்.
அத்துடன் பேட்டியொன்றில் மணிரத்னத்தை பார்க்கப் போனேன், அரை மணி நேரமா அவர் பேசவேயில்லை, எழுந்து வந்திட்டேன் என்று குமுறியிருக்கிறார். மேடை போட்டு மைக்கை கையில் கொடுத்தாலே நன்றி வணக்கம் என்று இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாதவரை பார்க்கப் போனது சரி, அவர் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
சந்தடி சாக்கில் இளையராஜாவையும் தனது பேட்டியில் சந்திக்கு இழுத்திருக்கிறார்.
மிஷ்கின் தனது கோபத்தை படைப்பாளிகள் மேல் காட்டுவதை விடுத்து படைப்பில் காட்டுவதே அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.