ஜாக்கிசான் படங்களை பார்த்து நரம்பெல்லாம் முறுக்கேறி திரியும் இளசுகளுக்கு அவரை சென்னைக்கே வரவழைத்து சிலிர்ப்பூட்டினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஜாக்கியை வைத்து அவர் படமெடுக்கப் போகிறார் என்ற பேச்சு காட்டு தீ போல பரவி வரும் வேளையில் இந்த முரட்டு வீரனை தமிழ் பேச வைத்து வெளிவருகிறது ஒரு (தமிழ்)படம்.
அதுதான் தி கராத்தே கிட்! பிரபல ஹாலிவுட் ஹீரோ வில் ஸ்மித், தனது மகன் ஜேடனை நடிக்க வைத்து தயாரிக்கும் படம் இது. முக்கிய வேடத்தில் ஜேடன் நடிக்க அவருக்கு சப்போர்ட் பண்ணுகிற வேடத்தில் நம்ம ஜாக்கிசான் நடிக்கிறார்.
தன் தாயுடன் சீனாவுக்கு இடம் பெயரும் ஒரு சிறுவன் போன புது இடத்தில் அவனது வகுப்பு மாணவர்களால் கொடுமைப்படுத்தப் படுகிறான். மிகவும் பலவீனமான இவன் அவர்களின் கொடுமையை ஒரு மாணவியின் முன் அனுபவிக்கிறான். இதனால் அவனுக்குள் வலி ஒரு புறமும், அவமானமும் மறுபுறமும் தாக்குகிறது. அந்த நேரத்தில்தான் அவனது குங்ஃப்பூ மாஸ்டருக்கு எல்லா உண்மைகளும் தெரிகிறது. போராடி ஜெயிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கிறார். சிறுவன் தன்னை துன்பப்படுத்தியவர்களை அடித்து பின்னி எடுப்பதுதான் இந்த தி கராத்தே கிட்.
அந்த குங்ஃப்பூ மாஸ்டர்தான் ஜாக்கிசான் என்பது உங்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும்? சம்மர் லீவுக்கு பசங்களை மகிழ்விக்க வந்து கொண்டேயிருக்கிறார்கள் ஜேடனும், ஜாக்கியும்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.