நான்கு நண்பர்கள் காலம் இது என்றே சொல்லத் தோன்றும் அளவுக்கு, எந்தப் படத்தின் போஸ்டர் விளம்பரம் பார்த்தாலும் நான்கு இளைஞர்கள் சிரத்துக்கொண்டும், முறைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட படம்தானே இதுவும் என்று நினைக்க வேண்டாம் என்று மறுக்கிறார் காதலாகி படத்தை இயக்கும் விஷ்வா.
காதல், நட்பு என இரண்டு விஷயங்கள் பிரதானமாக இதில் இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு காதலை எப்படி வெளிப்படுத்துறதுன்னே தெரியாமல் இருக்கிறார்கள். முதலில் ஒரு பெண்ணிடம் காதலா என்பதில் தெளிவு வேண்டும். அதே நேரத்தில் எதுவாக இருந்தாலும் அது கண்ணியமாக சொல்லப்பட வேண்டும்.
அந்த வகையில் முழு திருப்தியுடன் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். இதன் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக கிராஃபிக்ஸ் மூலம் சில மாயாஜாலம் செய்திருக்கிறோம். சின்ன பட்ஜெட் என ஆரம்பித்து பெரிய படமாகிவிட்டது. கிராஃபிக்ஸ் காட்சி படத்தில் கண்டிப்பாக பேசப்படும் என்றார் விஷ்வா மேலும் உறுதியுடன்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.