இலங்கையில் நடந்த பட விழவை புறக்கணித்த அமிதாப் பச்சனுக்கு அமெரிக்கா, கனடா, உலக வாழ் தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கை பாசிஸ அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப் படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும், ராஜபக்சேயை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனை எதிர்கொள்ள பல்வேறு நாடகங்களை இலங்கை அரசு நடத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை கொழும்பில் நடத்தியது.
இந்த விழாவுக்கு சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டவர் அமிதாப்பச்சன். நாம் தமிழர் இயக்கம் அவரது வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து அவர்களை அழைத்து பேச்சு நடத்தியவர், தமிழர்களின் சென்டிமெண்டுக்கு மதிப்பளிப்பதாக கூறியதுடன் தூதர் பொறுப்பிலிருந்தும் விலகினார். ராஜபக்சே போன்றவர்கள் நேரடியாக தலையிட்டும் விழாவை புறக்கணித்து இலங்கைபட விழா படுதோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார் அமிதாப்பச்சன்.
அவரது இந்தச் செயலை அமெரிக்கா, கனடா, உலக வாழ் தமிழர்கள் நன்றியுணர்ச்சியுடன் பாராட்டியுள்ளனர். அமிதாப்பச்சன் தானொரு சிறந்த மனிதநேய தூதுவர் என்பதை இதன் மூலம் நிரூபித்துவிட்டார் என அவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளனர். மேலும் பிக் பி என்ற பெருக்கு அவர் முழுத் தகுதியுடையவர் என்றும் பாராட்டியுள்ளனர்.
தாய் தமிழக தமிழர்களின் மனம் நிறைந்த பாராட்டும் அந்த உயர்ந்த மனிதருக்கு எப்போதும் உண்டு.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.