முதல்வர் கருணாநிதியின் பேரன்கள்தான் இன்றைய தேதியில் திரையுலகை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினும், துரை தயாநிதியும் தயாரிப்பாளர்கள். விரைவில் உதயநிதி நடிக்கவும் போகிறார்.
இன்னொரு பேரன் பாண்டிராஜின் வம்சத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் முன்னால் திரையுலகுக்குள் வந்தவர் மு.க.முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி.
பெருமாள் படத்தில் ஒரு பாடலைப் பாடி பின்னணிப் பாடகராக அறிமுகமான இவர் தற்போது தம்பி வெட்டோத்தி சுந்தரத்தில் நடிக்கவும் செய்கிறார். இதில் இவருக்கு சூசையப்பன் என்ற போலீஸ் அதிகாரி வேடம். நல்ல வேடம் அமைந்தால் தொடர்ந்து நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார் இந்த தொழில்முறை மருத்துவர்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவம். இதில் ஹீரோவாக கரணும், ஹீரோயினாக அஞ்சலியும் நடித்துள்ளனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.