மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ர‌ஜினி பாராட்டிய " சிங்கம் "

சிங்கம் என்றால் இது சூர்யா நடித்த சிங்கமல்ல, முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான பெண் சிங்கம்.

பாலி ஸ்ரீரங்கம் இயக்கியிருக்கும் பெண் சிங்கத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார். இப்படம் அவரது பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இரு தினங்கள் முன்பு தனது குடும்பத்துடன் ஃபோர் பிரேம் திரையரங்கில் பெண் சிங்கத்தை முதல்வர் பார்த்தார். அவருடன் வைரமுத்து, ஜே.கே.‌ரித்தீஷ், ர‌ஜினிகாந்த் ஆகியோரும் பெண் சிங்கத்தை ரசித்தனர்.

படம் நல்ல எ‌ண்டர்டெயினராக இருப்பதாகவும், பெண்ணின் வலிமையை சிறப்பாக சொல்லியிருப்பதாகவும் படம் பார்த்த ர‌ஜினி கருத்து தெ‌ரிவித்தார்.

மீரா ஜாஸ்மின், ரம்பா ஆகியோர் பெண் சிங்கத்தில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.