மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> U.Kயில் கலக்கும் " சிங்கம் "

தமிழில் ஒரு படம் வெளியாகும் அதேநாள் அப்படம் யுகே-யிலும் வெளியாகும். இது முதல் வ‌ரிசை நடிகர்கள், இயக்குனர்கள் படங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சூர்யாவின் சிங்கம் இங்கு வெளியான அதே நாள் யுகே-யிலும் வெளியானது. அதாவது சென்ற மாதம் 28 ஆம் தேதி. 28, 29, 30 ஆகிய தேதிகளில் மட்டும் சிங்கம் மிகப் பெ‌ரிய வசூலை எட்டியிருக்கிறது.

வெளியான முதல் மூன்று தினங்களில் இப்படம் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 21 வது இடத்தை பிடித்துள்ளது. மூன்று தினங்களில் ஒன்பது திரையிடல்களில் இப்படம் 54,230 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 37.42 லட்சங்கள்.

பையா, சுறா படங்களுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம். வரும் நாட்களில் மேலும் கணிசமான வசூலை சிங்கம் பெறும் என விநியோகஸ்தர்கள் நம்புகின்றனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.