மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அமீர் நீது சந்திராவுடன் ஆட்டம் போடுவாரா ?

யோகிக்குப் பிறகு அமீர் நடிக்க மாட்டார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அமீரைப் பற்றி வரும் தகவல்கள் ஆச்ச‌ரியமளிக்கின்றன.

யுத்தம் செய் படத்தை மிஷ்கின் சேரனை வைத்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அவரது பேவரைட் மஞ்சள் சேலை பாடலொன்றும் இடம்பெறுகிறது. இந்தப் பாடலில் ஆடப் போகிறவர் நீது சந்திரா.

குத்துப் பாடலான இதில் நீது சந்திராவுடன் இணைந்து ஆடப் போகிறவர் அமீர். யோகியில் அமீர் போட்ட குத்தாட்டத்தைப் பார்த்து மிஷ்கின் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ஆனாலும், படப்பிடிப்பு முடியும் வரை அமீ‌ரின் ஆட்டம் குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் அவரது மனம் மாறலாம். கலைஞனாயிற்றே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.