விஜய்யின் வேலாயுதம் படம் தொடங்கும் முன்பே சிக்கல் மேல் சிக்கல். விஜய்யின் சமீபகால படங்கள் எதுவும் ஓடாததால் வேலாயுதத்தின் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். நேரு உள் விளையாட்டு அரங்கில் அன்னதானம் கலை நிகழ்ச்சி என களைகட்டவிருந்தது விழா.
இந்நிலையில் இலங்கை படவிழாவுக்கு சென்றதாக ஜெனிலியா மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தொடக்க விழா போஸ்டர் அடிக்கும் முன் படத்தின் கதாநாயகியை மாற்ற வேண்டிய நிலை.
அதேபோல் படத்தின் தொடக்க விழாவுக்கு ஷாருக்கானை அழைக்க திட்டமிட்டிருந்தார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். இலங்கைப் பிரச்சனையில் ஷாருக்கான் தெரிவித்த சில கருத்துகள் சிங்களவர்களுக்கு சாதகமானவை என்று கூறி, அவர் தமிழ் நாட்டுக்கு வந்தால் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி.
இந்த திடீர் தாக்குதலால் ஷாருக்கை அழைப்பதா வேண்டாமா என்று திணறிக் கொண்டிருக்கிறது வேலாயுதம் டீம்.
படத்தில் பத்து நூறு பேரை அடிக்கும் விஜய் இதற்கொரு தீர்வு சொன்னால் நல்லது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.