மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரெட் கார்ட் அசினுக்கு ?

இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது, அங்கு நடக்கும் எந்தப் படப்பிடிப்பிலும் நடிகர்கள் கலந்து கொள்ளக் கூடாது என தமிழ் திரைப்பட தயா‌ரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தொழிலாளர் சம்மேளனம், நடிகர் சங்கம் என அனைத்துச் சங்கங்களும் தடை விதித்துள்ளன. இதனை மீறி சல்மான்கானின் ரெடி படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார் நடிகை அசின்.

இந்தியில் நடிக்கச் சென்ற பிறகு அசின் தமிழை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்நிலையில் அசினின் இரண்டாவது படம் லண்டன் ட்‌ரிம்ஸ் ஊத்திக் கொள்ள இந்தியில் வாய்ப்பில்லாமல் மீண்டும் தமிழுக்கு வந்து விஜய்யை தாஜா செய்து காவல்காரனின் நாயகியானார்.

காவல்காரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது சல்மான்கானின் ரெடி படத்தில் நடிக்க அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் அசினின் தெனாவட்டும் துளிர்விடத் தொடங்கியது. காவல்காரன் படத்துக்கு டிமிக்கி கொடுத்து ரெடி படப்பிடிப்பில் கலந்து கொண்டதோடு சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி இலங்கையில் நடந்த ரெடி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

ரெடி படப்பிடிப்பு இலங்கையில் நடப்பதாக திட்டமே இல்லை. சங்கங்கள் தடை விதிப்போம் என்று அறிவித்ததால் வேண்டுமென்றே வேறு நாட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பை இலங்கைக்கு மாற்றியிருக்கிறார் சல்மான்கான். அவரது இந்த தமிழ் விரோதப் போக்குக்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் வழியாக ஆதரவளித்துள்ளார் அசின்.

அசினின் இந்த செயலால் கொதித்துப் போயிருக்கும் படவுலகம் அவருக்கு ரெட் கார்ட் போடும் முடிவில் உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.