ஒட்டுமொத்த ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு எந்திரன். விநியோகஸ்தர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் படமும் இதுதான். ஒரு வருடத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதுடன் லாபத்தை தருகிற கற்பகதரு, ரஜினி படம் என்பது அவர்கள் பலமுறை அனுபவித்த உண்மை.
வரும் ஆகஸ்டில் அதாவது அடுத்த மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என ரஜினியே அறிவித்திருக்கிறார். ஆகஸ்டை குறிவைத்தே ஷங்கரும் வேகமாக போஸ்ட் புரொடக்சன் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார்.
ஆனால் எந்திரன் என்பது யாருடைய எதிர்பார்ப்புக்குள்ளும் அடங்காத பிரமாண்ட படமாயிற்றே... அறிவித்தபடி ஆகஸ்டில் படத்தை கொண்டு வருவது கஷ்டம் என்கிறார்கள் எந்திரன் யூனிட்டில். படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் மேலும் நாட்களை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் படம் செப்டம்பர் மாதமே திரைக்கு வரும் என்கிறார்கள்.
படத்தின் குவாலிட்டியில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை என்பதில் ஷங்கரைப் போலவே தயாரிப்பாளரும் உறுதியாக இருப்பதால் செப்டம்பர் மாதமே படம் திரைக்கு வரும் என அடித்துச் சொல்கிறார்கள்.
தள்ளிப் போனாலும் தரமாக வந்தால் சந்தோஷம்தானே.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.