மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராவணை முந்திய ராவணன்

மணிரத்னத்தின் புதிய படம் தமிழில் ராவணன் என்றும் தெலுங்கில் வில்லன் என்றும் இந்தியில் ராவண் என்றும் வெளியானது. இதில் இந்தி, தெலுங்குப் படங்கள் மிகப் பெ‌ரிய தோல்வியை சந்தித்துள்ளன. தமிழ் ராவணன் பரவாயில்லை என்ற அளவுக்கு வசூலித்துள்ளது.

யுகே யில் இந்தி ராவணை தமிழ் ராவணன் ஓவர்டேக் செய்துள்ளது.

வெளியான முதல்வாரம் ராவண் 11 வது இடத்தைப் பிடித்திருந்தது. இரண்டாவது வாரத்தில் 19 வது இடம். ராவணனோ வெளியான இரண்டாவது வாரம் 24 வது இடத்தைப் பிடித்தது. ஆனால் மூன்றாவது வாரத்தில் காட்சிகள் அப்படியே மாறியுள்ளன.

இந்தி ராவண் 36 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ராவணன் 33 வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் ராவண் வசூல் 5,271 பவுண்ட்கள். ஆனால் தமிழ் ராவணனின் வசூலோ 5,608 பவுண்ட்கள்.

இதுவரை இந்தி ராவண் 1.6 கோடியையும், தமிழ் ராவணன் 96.1 லட்சங்களையும் வசூலித்துள்ளன. இந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில் யுகே பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமை ராவணனுக்கு கிடைத்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.