மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ர‌ஜினி ஹ‌ரி இயக்கத்தில்?

இப்போது கேள்விக்குறியுடன் இருக்கும் இந்த‌ச் செய்தி விரைவில் ஆச்ச‌ரியக்குறியாக மாறுவதற்கான சாத்தியம் தெ‌ரிகிறது.

ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் மீண்டும் படம் தயா‌ரிக்கும் முனைப்பில் கதை இலாகாவை பழையபடி பரபரப்பாக்கியுள்ளது. இவர்களின் முதல் தயா‌ரிப்பில் ர‌ஜினி ஹீரோவாக நடிக்க அதிக சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை ஹ‌ரி இயக்குவார் என்பது புதிய செய்தி. சிங்கம் கண்டபடி ஓடுவதாலும், ஹ‌ரியின் படங்கள் என்றால் மினிமம் கியாரண்டி உத்தரவாதம் என்பதாலும் ஹ‌ரியின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக‌க் கூறுகின்றனர்.

தற்போது ர‌ஜினியின் மருமகன் தனுஷை வைத்து இயக்கும் படத்தின் கதை விவாதத்தில் ஹ‌ரி பிஸியாக உள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.