மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யுடன் நடிக்க பிடிக்கவில்லை - சிம்பு

3 இடியட்ஸ் ‌ரீமேக்கிலிருந்து விலகுவதாக சிம்பு தெ‌ரிவித்துள்ளார்.

3 இடியட்ஸின் தமிழ், தெலுங்கு ‌‌ரீமேக்கை ஷங்கர் இயக்குகிறார். தமிழில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய்யும், இன்னொரு வேடத்தில் சிம்புவும், மூன்றாவது நபராக சித்தார்த்தும் நடிப்பதாக கூறப்பட்டது. முதலில் இதனை ஒப்புக்கொண்ட சிம்பு இப்போது படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சிம்பு அ‌ஜீத் ரசிகர். தனது படத்தில் அ‌ஜீத் புகழ்பாடும் காட்சிகளை பலமுறை வைத்துள்ளார். தற்போது 3 இடியட்ஸிலிருந்து அவர் விலகவும் இந்த ரசிக மனோபாவம்தான் காரணம்.

3 இடியட்ஸில் விஜய் ஹீரோ. எனக்கு அ‌‌ஜீத் ரசிகர்கள் அதிகம். நான் விஜய்யுடன் நடிப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் 3 இடியட்ஸில் நான் நடிக்கப் போவதில்லை என வெளிப்படையாக தெ‌ரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.