டூயட் மூவிஸ் சார்பில் பிரகாஷ்ராஜ் தயாரித்திருக்கும் படம், இனிது இனிது. தெலுங்கில் சேகர் கம்மூலா இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஹேப்பிடேஸ் படத்தின் தமிழ் ரீமேக் இது.
இனிது இனிதுவை ஒளிப்பதிவாளர் கே.வி.குகன் இயக்கியிருக்கிறார். குஷி, நியூ, மொழி, தெலுங்கு அத்தடு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த குகனின் முதல் இயக்குனர் முயற்சி இந்தப் படம்.
கல்லூரியின் முதல் நாளில் தொடங்கும் படம் இறுதி நாளான ஃபேர்வெல் டேயில் முடிகிறது. இடைப்பட்ட காலத்தில் மாணவர்களின் நட்பு, காதல், மோதல், துரோகம், பச்சாதாபம் என அனைத்தையும் மிகை இல்லாமல் சொல்கிறது.
படத்தில் நடித்திருப்பவர்கள் - சோனியா நீங்கலாக - அனைவரும் புதுமுகங்கள். இரண்டாயிரம் பேரிலிருந்து இந்த புதுமுகங்களை குகனும், பிரகாஷ்ராஜும் தேர்வு செய்துள்ளனர். படத்தின் மிகப்பெரிய வலிமை இசையும், ஒளிப்பதிவும்.
ஒளிப்பதிவை குகனே செய்துள்ளார். இசை மிக்கி ஜே.மேயர். இவர் ஹேப்பிடேஸ் படத்துக்கு இசையமைத்தவர். மிக்கியின் இசை நன்றாக இருந்ததால் அவருக்கு இனிது இனிதுக்கு இசையமைக்கும் வாய்ப்பை அளித்துள்ளனர். இரண்டு பாடல்கள் தவிர்த்து அனைத்தும் தமிழுக்காக போடப்பட்டது என்பது முக்கியமானது.
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.