அமெரிக்க வானியல் மண்டல ஆய்வு விஞ்ஞானிகள் சந்திரன் சுருங்கி வருவதாகக் கண்டுபிடித்துள்ளனர். நாசாவிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான துணைக்கோள் படங்களை ஆராய்ந்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
சந்திரனின் மேற்புறத்தில் சுருக்கங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் சந்திரன் சுருங்கிக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
சந்திரனின் மேற்புரத்தில் காணப்படும் இந்த சுருக்கங்கள் பல மைல்கள் நீளம் ஊடையதாக இருப்பது தெரிய வந்துள்ளது.
சந்திரன் அதன் சுற்றளவில் 200மீ சுருங்கியுள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆனால் கோள்கள் ஆய்வு விஞ்ஞானிகளுக்கு இந்த 'சுருங்கல்' விவகாரம் ஒன்றும் புதிதல்ல. சந்திரன் உருவான போது பூமி போலவே அதன் மையத்தில் உஷ்ண மையம் இருந்தது. அதனால் அது துவக்கத்தில் விரிவடைந்தது. தற்போது குளிரடைதல் செயல் காரணமாக சந்திரன் சுருங்குகிறது என்று கூறுகின்றனர் இந்த நிபுணர்கள்.
இதனால் சந்திரன் இன்னும் குளிரடைகிறது என்று தெரியவந்துள்ளது. இதனால் அதன் மேற்புறம் அழுத்தம் பெற்று சுருங்குகிறது. இதனால்தான் இந்த சுருக்கங்கள் தோன்றுகின்றன.
வாஷிங்டனின் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்யூட்டின் தாமஸ் வாட்டர்ஸ் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு குழு சாட்டிலைட் புகைப்படங்களை ஆய்வு செய்தது.
சந்திரனில் எந்தவிதமான புவி நடவடிக்கைகளும் நடைபெறுவதில்லை அது நிலவியல் அடிப்படையில் இறந்த ஒன்று (Geologically Dead) என்றும், அப்படி ஏதாவது நிலவியல் நடவடிக்கைகள் இருந்திருந்தால் அது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததே என்றும் கருதப்பட்டு வந்த கருத்துக்களை தற்போதைய கண்டுபிடிப்புகள் முறியடித்துள்ளது.
ஆனால் சந்திரன் சுருங்கி அது வேறு எங்கும் சென்று விடவோ அல்லது காணாமல் போகவோ வாய்ப்பில்லை என்று கூறும் இந்த விஞ்ஞானிகள் இந்த சுருக்க விவகாரம் பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளனர்.
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது செவ்வாய் கிரகம் அளவிலான பொருள் ஒன்று மோதியதால் பயங்கரமான இடிபாட்டுத் துகள்கள் உருவாயின, பிறகு இந்தத் துகள்கள் ஒன்றோடொன்று மோதி நசுங்கி சந்திரனாக உருவாகியது. இந்தத் துகள்களில் சில கதிரியக்கத்தை வெளியிடத் துவங்கின. சந்திரன் உருவான கதை இதுதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.