3 இடியட்ஸ் படம் குறித்த குழப்பத்தை அதன் இயக்குனர் ராஜு ஹிரானி தீர்த்து வைத்தார்.
அமீர்கான், மாதவன், கரீனா கபூர் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்திய அளவில் புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. ரீமேக்கை இயக்குகிறவர் ஷங்கர்.
3 இடியட்ஸின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகப் போவதாக சில நாட்களாக பரபரப்பு வதந்திகள். அதேபோல் தமிழ், தெலுங்கு ரீமேக் கைவிடப்படுவதாகவும் சில விஷமிகள் செய்தி பரப்பினர். இந்த வதந்திகளுக்கெல்லாம் ராஜு ஹிரானி முற்றுப் புள்ளி வைத்தார். விழாவொன்றில் பேசிய அவர்,
3 இடியட்ஸ் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதை அவர் உறுதிபடுத்தினார்.
தமிழ் ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கு ரீமேக்கில் மகேஷ்பாபுவும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.