சோலோ ஹீரேவாக நடித்து வந்த கரண் முதல் முறையாக சத்யராஜுடன் இணைந்து நடித்த படம் இரண்டு முகம். படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லையென்றாலும் கரணின் கேரக்டர் மட்டும் பலராலும் ரசிக்கப்பட்டது. முக்கியமாக அவர் தனது வேடத்தை அண்டர்ப்ளே செய்திருந்த விதம். எப்போதும் கேஷுவலாக இருக்கும் கரண் தனது படங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை உங்களுக்காக.
இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
கந்தா, சூரன், தம்பி வெட்டோத்தி சுந்தரம்னு மூணு படங்களில் நடிச்சிட்டிருக்கேன். இந்த மூணு படங்களோட கதைக்களமும், என்னோட கேரக்டரும் வித்தியாசமாக ஒவ்வொண்ணுக்கும் சம்பந்தமில்லாம இருக்கும்.
இந்தப் படங்களின் ஒன் லைன் சொல்ல முடியுமா?
கந்தா ஆசிரியர்-மாணவர் உறவைச் சொல்கிற படம். வெளிநாடு போய் ஊர் திரும்பும் ஒரு இளைஞன் தனக்கு படிப்புச் சொல்லித் தந்த ஆசிரியரை தேடி அலைகிறான். அப்போது அவனது ஊர் ரௌடிகளால் சின்னாபின்னமாகி கிடப்பதைப் பார்க்கிறான். அதன் பிறகு அவன் எடுக்கும் சில முடிவுகளும், செயல்களும்தான் கதை.
சூரன் படம் ரௌடிகளைப் பற்றியது. பொதுவாக ரௌடி என்றால் அவனது ரௌடியிஸத்தை காண்பிப்பார்கள். இதில் வித்தியாசமாக அவனது இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்கலாம்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம் குமரி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாழ்ந்த சுந்தரம் என்ற மனிதனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம்.
ஒவ்வொரு படமும் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்தது. அதற்கேற்ப அந்தந்த வட்டார வழக்குகளில் எப்படி உங்களால் பேச முடிகிறது?
நான் நடிக்கிற படம் எந்த ஊரை பின்னபுலமாகக் கொண்டிருக்கிறதோ, அந்த ஊர் வட்டார வழக்கைதான் பேசுவேன். கொக்கி படத்தை பார்த்தீங்கன்னா கிராமத்திலிருந்து பட்டணம் வரும் அப்பாவி கேரக்டர்ல நடிச்சிருப்பேன். அதுக்குத் தகுந்த மாதிரி கிராமத்து பாஷையில் பேசியிருப்பேன். கருப்பசாமி குத்தகைதாரர் படத்துல மதுரைக்காரன். அதனால் மதுரை பாஷை பேசியிருப்பேன்.
இது எப்படி சாத்தியமாகிறது?
நாம போகிற இடங்களில் சந்திக்கிற மனிதர்களை உன்னிப்பா கவனிச்சு அப்சர்வ் பண்றதுதான் இதற்கு காரணம். தம்பி வெட்டோத்தி சுந்தரத்தில் நாஞ்சில் நாட்டு பாஷை பேசியிருக்கேன். கந்தாவில் தஞ்சாவூர் பாஷை.
கேரக்டருக்கு தகுந்தபடி மாறுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
நான் எந்த கேரக்டரில் நடிக்கிறேனோ அதுகேற்றபடிதான் என்னுடைய தோற்றமும் இருக்கணும். இப்போதுகூட ஏழரை கிலோ எடை குறைச்சிருக்கேன். கேரக்டருக்கு தேவைப்பட்டா எடையை கூட்டவும், குறைக்கவும் என்னால் முடியும்.
சத்யராஜுடன் இணைந்து நடித்த அனுபவம்?
அவரோடு நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவர் பெரிய நடிகர் மட்டுமில்லை, யதார்த்தமான இயல்பான மனிதர். எனக்கு பல விஷயங்களை அவர் சொல்லித் தந்தார். மூத்த நடிகரான அவர் என்னை நண்பனாக நினைத்து பழகியது எப்போதும் மறக்க முடியாது.
சமீபத்தில் உங்கள் பிறந்த நாளை கிராமத்து மக்களோடு இணைந்து கொண்டாடினீர்களே?
சென்னை பக்கத்திலுள்ள எருமைவெட்டி பாளையத்தில் என்னுடைய பிறந்த நாளை அந்தக் கிராமத்து மக்களுடன் கொண்டாடினேன். அவர்களுக்கு என்னாலான உதவிகள் செய்து, மரக்கன்றுகள் நட்டு... உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்புக்கு வேற ஊர் செல்லும் போது அங்குள்ள மக்களுடன் பேசும் போதுதான் அவங்க நம்ம மேல வச்சிருக்கிற மரியாதையும் அன்பும் தெரிய வரும். அந்த நல்ல அனுபவம்தான் நான் மக்களோடு பிறந்த நாள் கொண்டாடக் காரணம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.