எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் இத்தனை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாலாபிஷேகம் செய்தது உலகிலேயே இந்தப் படத்துக்காகதான் இருக்கும். அந்தவகையில் எந்திரன் மேலுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
எந்திரன் ட்ரெய்லர் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்டது. சத்யம் காம்ப்ளக்ஸ்தான் ஹைலைட். வைரமுத்து, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் என அரங்கு வழிய விஐபிகள். லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா என குடும்ப உறுப்பினர்களும் உண்டு.
ரஜினி எண்பதாவது வயதிலும் இதேபோல் டூயட் பாடுவார். காரணம் ஏஜ் அல்ல இமேஜ் என்று ரஜினி ரசிகர்களை விசிலடிக்க வைத்தார் ரவிக்குமார். வைரமுத்து இன்னும் ஒருபடிமேல். எந்திரனில் ரஜினி 100 அடி பாய்ந்திருக்கிறார். அடுத்தப் படத்தில் 120 அடி பாய்வார் என்றார். ரஜினியையும், அமிதாப்பையும் வைத்து அவர் சொன்ன கதையை ரஜினியே ரசிப்பாரா என்பது சந்தேகம்.
எந்திரன் படத்துக்கு 1000 நாள் போஸ்டர் அடிப்பார்கள் என ஆருடம் சொன்னார் ஆர்யா.
சத்யத்தில் ட்ரெய்லரை ரஜினி வெளியிட்டார், கலாநிதி மாறன் இந்த விழாவில் கலந்து கொண்டார்.
சென்னையில் மட்டும் பல்வேறு திரையரங்குகளில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரெய்லர் வெளியீடே ஒரு திருவிழாவாக இருந்தது மிகையல்ல.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.