மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> Facebookகில் மூழ்கினால் தொலைந்தது ??

நொடியில் தகவல்களை கணினியில் கொட்டுவது, கொண்டு சேர்ப்பது என இன்றைய இணைய தள உலகத்தினால் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு, அவற்றை வரையறையில்லாமல் பயன்படுத்தும்போது தீமைகளும் வந்து சேருகிறது என்பதை தினம் ஒரு தினுசில் வெளிப்படும் சைஃபர் கிரைம் எனப்படும் இணைய தளக் குற்றங்கள் உணர்த்துகிறது.

இத்தகைய சைஃபர் கிரைம் குற்றங்கள் ஒருபுறம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமுதாயத்தை பாதிக்கச் செய்கிறது என்றால், மறுபுறம் வலை தளங்களிலேயே மூழ்கி, குறிப்பாக சாட்டிங் போன்றவற்றுக்கு அடிமையாகி உடல் நலம், மன நலம் பாதிகப்பட்டு, வேறு பல பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இது குறித்த ஆய்வில், பாதிக்கப்படுபவர்களில் மாணவர்களும் இருப்பதாக கூறி திடுக்கிட வைக்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

இணைய தளங்களுக்கு அடிமையானவர்களிடம் முதலிடத்தில் இருப்பது சாட்டிங் என்றால், மாணவர்கள் ஏகத்திற்கு மோகம் கொண்டு மூழ்கி கிடப்பது "ஃபேஸ்புக்" எனப்படும் சமூக வலைத் தளங்கள்தான் என்கின்றனர் அந்த ஆய்வாளர்கள்!

மாணவர்களின் இந்த ஃபேஸ்புக் மோகத்தால், அவர்களது படிப்பு பாதிக்கப்படுவதாகவும், ஃபேஸ்புக் பயன்படுத்தாத மாணவர்களை காட்டிலும், அதில் மூழ்கி கிடக்கும் மாணவர்களின் படிப்பு திறன் சுமார் 20 விழுக்காடு அளவுக்கு குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட மனோதத்துவ நிபுணர்கள்.

பொதுவாகவே இளவயதுக்காரர்களுக்கு கணினியிலும், இணைய தளங்களிலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யக்கூடிய திறன் மூளையில் அதிகமாக இருக்குமாம்.

இத்தகைய நிலையில், கணினியிலோ அல்லது இணைய தளத்திலோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்துகொண்டே மறுபுறம் தனது நண்பர்கள் அல்லது தோழிகளுடன் சாட்டிங் செய்வது, மின்னஞ்சல் அனுப்புவது, இன்பாக்ஸை திறந்து, மெயில் வந்துள்ளதா என்று 'செக்' பண்ணுவது, அப்படியே ஃபேஸ்புக் அல்லது இதர சமூக வலைத்தளங்களில் மேய்வது என்று அங்குமிங்குமாக வளைய வந்துகொண்டிருக்கும் போக்கு இன்றைய தலைமுறையினரிடையே சர்வ சாதாரணமாக காணப்படுகிறது.

அப்படி இருக்கையில் இள ரத்தம் கொப்பளிக்கும் மாணவர்களிடம் கேட்கவா வேண்டும்?

மடிக்கணினியை திறந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய ஆரம்பித்தபடியே படிப்பையும் கவனிக்கும்போது, தானாகவே நேர பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதனால் பிரதான வேலையான படிப்பை முடிப்பதில் தாமதம் மற்றும் தவறுகள் நிகழ்வது என பிரச்சனைகளை வரிசை கட்டி வர ஆரம்பித்து விடுகின்றனவாம்!

இது தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று 19 முதல் 24 வயதுடைய 219 மாணவர்களிடம் நடத்திய ஆய்வில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் சராசரி கல்வி திறன் 3.06 ஜிபிஏ - GPA - ஆக இருந்த நிலையில், அவற்றை பயன்படுத்தாத மாணவர்களின் கல்வி திறன் 3.82 என்ற அளவிற்கு கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தங்களால் அதிக நேரம் படிப்புக்காக செலவிட முடிவதாகவும் கூறியுள்ளனர் சமூக வலைத் தளங்களை பயன்படுத்தாத மாணவர்கள்!

அதே சமயம் ஃபேஸ்புக் போன்வற்றில் மேயும் மாணவர்களில் நான்கில் மூன்று பேர், சமூக வலைத்தளங்களில் மேய்வதால் படிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக கூறுவதை தங்களால் ஏற்க முடியவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆய்வு என்னவோ, பாதிப்பு ஏற்படுவது உண்மைதான் என அடித்துக் கூறுகிறது.

உண்மையை ஏற்றுக்கொள்வதுதானே உச்சத்திற்கு செல்லும் வழி?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.