
தெலுங்கில் குறுகிய காலத்தில் இரு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில் ஒரு படம் இந்தியில் வெளியான லவ் ஆஜ் கல் படத்தின் தெலுங்கு ரீமேக்.
தமிழில் மன்மதன் அம்பு படத்தில் மட்டும் நடித்து வருகிறவர் அஜீத் ஜோடியாக மங்காத்தாவில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மங்காத்தாவில் அஜீத்துடன் நாகார்ஜுனா, பிரேம்ஜி அமரன், லட்சுமிராய், கணேஷ் வெங்கட்ராமன் உள்பட ஏராளமானோர் நடிக்கிறார்கள். நீது சந்திரா நடிப்பதாக முன்பு கூறப்பட்டது. ஆனால் இப்போதைய பட்டியலில் அவர் பெயர் இல்லை.
அவருக்கு பதில்தான் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.