
எனக்கு வாய்ப்புகள் இல்லை என்று சிலர் சொல்வதில் உண்மையில்லை. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் என்னைத் தேடி வந்த வாய்ப்புகள் பதினைந்துக்கும் மேல் இருக்கும். ஆனால் எல்லாம் ஒரே விதமான கேரக்டர்ஸ். தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்தால் ரசிகர்களுக்கும் போரடிக்கும், நமக்கும் போரடிக்கும். அதனால் ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் சில தவறான வாய்ப்புகளை ஒப்புக் கொண்டதும், இயக்குனர்களின் முகத்துக்காக நடித்துக் கொடுத்ததும் மிகப்பெரிய தப்பு என்று இப்போது உணர்கிறேன். இனி அப்படியொரு தவறை செய்ய மாட்டேன். கதையும், கேரக்டரும் ஓகே என்றால் மட்டுமே நடிப்பேன்.
ஆனால் தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே?
நான் முதலில் அறிமுகமானது தெலுங்கில் என்றாலும் தமிழில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் சிம்கா படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்தேன். படம் அங்கு சூப்பர்ஹிட். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான வேடம் ஒன்று வந்தது. அதை மட்டுமே ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
நமிதா என்றால் கிளாமர் என்றுதான் ரசிகர்கள் அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் திடீரென இளைஞன் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே?
ஒரு நடிகையைப் பொறுத்தவரை அவரது கேரக்டர் எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம். இளைஞன் படத்தைப் பொறுத்தவரை எனக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வில்லிதான். ஆனால் ரஜினி சாருக்கு இணையாக அவரது கேரக்டர் பேசப்பட்டது. அப்படியொரு கதாபாத்திரத்தில்தான் நான் நடித்திருக்கிறேன்.
முதல்வர் உங்களை பாராட்டியதாக செய்திகள் வந்ததே?
படத்தின் ரஷ் பார்த்துவிட்டு டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், குஷ்பு மேடமும் பாராட்டினார்கள். முதல்வர் அவர்களும் படத்தைப் பார்த்துவிட்டு நல்லாயிருக்கு என்று பாராட்டியதாக இயக்குனர் சொன்னார்.
திடீரென சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டீர்களே...?
மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருப்பதை கௌரவமாக நினைக்கிறேன். இந்த சிகழ்ச்சியின் மூலம் என்னால் வாராவாரம் ரசிகர்களை சந்திக்க முடிகிறது, அவர்களின் உணர்வுகளை நெருக்கமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இது எனக்கே புது உற்சாகமாக இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு ரசிகையாக எனக்கு மிக விருப்பமான நிகழ்ச்சி அது.
திருமணம்....?
இப்போதைக்கு அதைப் பற்றி யோசிக்கவில்லை.
தமிழ் ரசிகர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ் ரசிகர்கள் தமிழ்நாட்டில் எனக்கென ஒரு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் அன்பானவர்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.