தேசிய விருது கிடைத்ததையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. பேச்சில் வழக்கம் போல சுவாரஸியமும், கோபமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.
இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் 4வது தேசிய விருது இது. பின்னணி இசைக்காக அவருக்கு கிடைத்த முதல் விருது இது. இதனை அவரே ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். இளையராஜா அதிகமான மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் இதுவரை மலையாளப் படத்திற்கு இசையமைத்ததற்காக அவருக்கு விருது எதுவும் கிடைத்ததில்லை.
உங்களுக்கு விருது கிடைத்த பிறகுதான் எனக்கு கிடைக்கும் விருதை ஏற்றுக் கொள்வேன், அதற்குமுன் எனக்கு விருது கிடைத்தால் அதை ஏற்றக்கொள்ள மாட்டேன் என்று பழஸிராஜா இயக்குனர் ஹரிஹரன் கூறியிருந்ததை நினைவுகூர்ந்தார் இசை ஞானி.
ஜாம்பவான்கள் நிறைந்திருந்த இசையுலகு இப்போது மொட்டையடிக்கப்பட்டு விட்டதாக குறைபட்டுக் கொண்டவர், ஆங்கிலத்தையும், தெலுங்கையும், மலையாளத்தையும் மட்டுமே தனது பேட்டியின் போது பயன்படுத்தினார். தமிழ் மீது இளையராஜாவுக்கு அப்படி என்ன கோபமோ?

அவர் கோபத்தில் நியாயமிருக்கிறது....
ReplyDelete