மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமல் இந்தியில் ???

இப்போதைக்கு கேள்விக்குறியுட‌ன்தான் இந்த செய்தியை சொல்ல வேண்டியிருக்கிறது. கமல் விரைவில் இந்தியில் நடிக்கப் போகிறாராம்.

இந்த செய்தியை வெளியிட்டவர் கமல் அல்ல, அனில் கபூர்.

அனில் கபூர் கமலின் தீவிர ரசிகர். தேவர்மகன் படத்தை இந்தியில் ‌‌ரீமேக் செய்தபோது கமல் வேடத்தில் அனில் கபூர்தான் நடித்தார். இந்தப் படத்துக்காக கமலுக்கு சிறந்த கதாசி‌ரியருக்கான விருது கிடைத்தது.

சமீபத்தில் கமலை சந்தித்த அனில் கபூர், நாம் இணைந்து படம் பண்ண வேண்டும் என கேட்டிருக்கிறார். சற்றும் யோசிக்காமல் உடனே ஓகே சொல்லியிருக்கிறார் கமல்.

இதனால் மகிழ்ந்து போயிருக்கும் அனில் கபூர் தற்போது கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெ‌ரிவித்துள்ளார். இந்தப் படம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் தயாராகும் என்று தெ‌ரிகிறது.

கமல் பல வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் ஜெயராமுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.