இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு சலுகை இருப்பதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த பூலோகத்திலும் இப்படியொரு புரட்சி நடந்ததாக கேள்வியில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற வேடிக்கையான சலுகை நடைமுறையில் உள்ளது.
மேலோட்டமாகப் பார்த்தால் தமிழை வளர்க்க அரசு எடுத்துக் கொண்ட அபாரமான முயற்சி இது என்று தோன்றும். அப்படி தோன்றும் என்பதாலேயே கொடுக்கப்பட்ட சலுகைதான் இது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.
இந்தச் சலுகையால் படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு எவ்வித பலனும் இல்லை. அதாவது வரிச்சலுகை நீங்கள் வாங்கும் டிக்கெட் கட்டணத்தில் பிரதிபலிக்காது. மாறாக அந்தச் சலுகையின் முழுப் பயனையும் திரையரங்க உரிமையாளரே அனுபவிப்பார். இது பற்றி சாச்சை கிளம்பிய போது, இல்லையில்லை தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கூட இதில் பங்குண்டு என்று சொல்லப்பட்டது. யாருக்கு பங்கு இருப்பினும் பெரும்பான்மையான பொது மக்களுக்கு அதாவது படம் பார்க்க வரும் ரசிகனுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை.
இந்த பாரபட்ச சலுகை சில மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஒருவர் தனது படைப்புக்கு எந்தப் பெயரை தேர்வு செய்வது என்பது அவரது தனிமனித சுதந்திரம் தொடர்பானது. சன் பிக்சர்ஸ், கிளவுட் நைன் என்றெல்லாம் பெயர் வைப்பது போல் ஒருவர் தனது திரைப்படத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க விரும்பினால் அதனை இந்தச் சலுகையை அனுபவித்து வருகிறவர்கள் கறாராக மறுத்துவிடுகின்றனர். அதேநேரம் சலுகையின் பயன் ரசிகனுக்கு கிடைக்கும்படி செய்திருந்தால் ஒரு கலைஞனின் பெயர் வைக்கும் உரிமை பேணப்பட்டிருக்கும். காரணம் அதிகபடியான கட்டணத்தை ரசிகனே தந்துவிடுவான். திரையரங்க உரிமையாளர்கள் பாதிப்படைய மாட்டார்கள்.
அரசின் இந்தச் சலுகையால் அருமையான பல தமிழ்ப் பெயர்களை நாம் பார்க்க முடிகிறது. குட்லக், லேடீஸ், பாய்ஸ் என்றெல்லாம் அந்நிய மொழி மோகத்தில் பெயர் வைப்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை சலுகையின் வழியாகதான் உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி. சென்னை மாநகரில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்களின் பெயர்களும் - மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு இதிலும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாக கேள்வி - தமிழில் மாற்றப்பட்டுள்ளன. காபி ஸ்டால் என்பதை கொட்டை வடிநீர் நிலையம் என்றுவரை தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு சலுகை எதுவும் அளிக்கவில்லை. கறாரான ஒரு ஆணையின் மூலம் இதனை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். ஒரு ஆணை மூலம் சாத்தியமாகக் கூடிய விஷயத்திற்கு சலுகை என்ற பெயரில் அரசு வருமானம் மடை மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழில் வைக்கப்படும் பெயர்களின் அரசியல் இன்னொரு வகை. இலக்கணப் பிழை என்றொரு படம். அற்புதமான தமிழ்ப் பெயர். ஆனால் படத்தின் கதையும், நோக்கமும் சதையை பிரதானப்படுத்துபவை. வித்தியாசமான கதை, வித்தியாசமான முயற்சி என்றெல்லாம் சினிமாக்காரர்கள் வித்தியாசத்தை விதவிதமாகப் பிழிந்தெடுத்து, வித்தியாசம் என்ற சொல்லையே ஒரு கெட்டவார்த்தை ஆக்கியது போல, நல்ல பல தமிழ்ப் பெயர்களும் இவர்களின் கதை காரணமாக சாயம் இழந்து போகின்றன. அது எப்படி சாயம் இழந்து போகும் என்று சிலர் கேட்கலாம். ஷகிலா என்பது அருமையான பெயர். ஆனால் அதனை தங்கள் குழந்தைக்கு வைக்க தமிழக தாய்மார்கள் யோசிக்கிறார்களே... அதுபோலதான் இதுவும்.
இந்தச் சலுகையை கேலி செய்வதுபோல் படத்தின் பெயருக்கு கீழேயே சப் டைட்டில் என்ற ஒன்று வைக்கப்படுகிறது. இந்த சப் டைட்டில்கள் என்பவை சட்டம் எதுவும் போடாமலே தனி ஆங்கிலத்தில்தான் வைக்கப்படுகிறது. தி பாஸ், சர்வைவல் ஆஃப் பிட்டஸ்ட், ஒன் மேன் ஆர்மி, காட் ஒன்லி ஜட்ஜ் ஹிம்... சொல்லிக் கொண்டே போகலாம்.
முன்பு சப் டைட்டில்கள் கடுகு அளவில் இருந்தன. பிறகு படத்தின் பெயர் அளவுக்கு பெரிதாக வைத்தார்கள். இப்போது சப் டைட்டில்தான் பிரதானம். படத்தின் பெயர் கடுகு அளவுக்கு சிறுத்துவிட்டது. இந்த மோசடியை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
கிளவுட் நைன் நிறுவனமும், ஒய் நாட் நிறுவனமும் (ஆகா, என்ன அருமையான தமிழ்ப் பெயர்கள்?) இணைந்து ஒரு படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் விளம்பரங்களில் குவாட்டர் பாட்டிலும் குவாட்டர் கட்டிங் என்ற எழுத்துக்களுமே பிரதானமாக தெரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் பெயர் குவாட்டர் கட்டிங் இல்லையாம். பிறகு? வ என்று ஓரெழுத்தை போனால் போகிறது என்று ஓரமாக போடுகிறார்கள். அதுதான் படத்தின் பெயராம். சலுகைக்கு வ, சந்தோஷத்துக்கு குவாட்டர் கட்டிங்.
ஆங்கில பெயர்களுக்கோ, ஆங்கிலத்தில் வைக்கப்படும் துணைப் பெயர்களுக்கோ, அரசின் தமிழ்ப் பெயர் மீதான கரிசனத்துக்கோ... ஏன் குவாட்டர் கட்டிங்குக்கோ கூட நாம் எதிரியல்ல. ஆனால் அரசின் சலுகை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதன் அவுட் லைன்... அதுதான் வேடிக்கை.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.