5. தெய்வத்திருமகள்
ஹாலிவுட் காப்பியான இத்திரைப்படம் சென்னை மக்களை வெகுவாக வசீகரித்துள்ளது. எட்டு வார முடிவில் 7.22 கோடிகளை வசூலித்துள்ள இத்திரைப்படம் சென்ற வார இறுதியில் 2.21 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
4. மதிகெட்டான் சாலை
அறிமுக நடிகர் ஆதர்ஷ் நடித்திருக்கும் இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.27 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
3. யுவன் யுவதி
பரத் நடித்திருக்கும் இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் தனது தோல்வியை பதிவு செய்துள்ளது. சென்ற வார இறுதியில் 6.34 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை 1.09 கோடியை வசூலித்துள்ளது.
2. காஞ்சனா
லாரன்ஸின் காஞ்சனாவுக்கு இப்போதும் ரசிகர்களுக்கு குறைவில்லை. சென்ற வார இறுதியில் 9.13 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் இப்படம் இதுவரை சென்னையில் 5.06 கோடிகளை வசூலித்துள்ளது.
1. மங்காத்தா
சென்ற வார இறுதியில் ஒரு கோடியே 22 லட்சத்து அறுபத்தி மூன்று ரூபாய் வசூல் செய்து எந்திரனின் வார இறுதி வசூலை முறியடித்திருக்கிறது மங்காத்தா. முதல் பன்னிரண்டு தினங்களில் சென்னையில் மட்டும் இப்படம் 4.24 கோடிகளை வசூலித்து அமர்க்களப்படுத்தியுள்ளது. இதுவொரு சாதனை என்றால் மிகையில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.