ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் முனைப்பு காட்டுவதில் ஆச்சரியமில்லை. அஜீத் கூட இப்போது பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில்தான் நடித்து வருகிறார்.
மங்காத்தா படத்தின் அபிரிதமான வெற்றி, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபுவை யோசிக்க வைத்திருக்கிறது.
சென்னை 28, சரோஜா போன்ற ஹிட்கள் கொடுத்தாலும் மாஸ் ஹீரோவை வைத்து வெங்கட்பிரபு வெற்றியை கொடுத்த முதல் படம் மங்காத்தா. இப்படம் அவரது மார்க்கெட்டை ரொம்ப உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. படத்தில் அஜீத்தின் நெகடிவ் கேரக்டர் அனைவருக்கும் பிடித்திருப்பதால் மங்காத்தா இரண்டாம் பாகத்தை உருவாக்கும் யோசனை அவருக்குள் உதித்திருக்கிறது.
விரைவில் மங்களகரமான அறிவிப்பு வரலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.