
அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நாயகன்களாக மம்முட்டி, அர்ஜுன் நடித்துள்ளனர். இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
அர்ஜுன் இதில் போலீஸ் உயரதிகாரியாக நடித்துள்ளார். மம்முட்டிக்கு ஜோடி சினேகா. அவர் விமான பைலட்டாக நடித்துள்ளார். பைலட்டாக சினேகா நடிப்பதும் இதுவே முதல்முறை.
டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு. வைரமுத்து, நந்தலாலா, சினேகன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
ஆக்சன் படமான இதற்கு புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்திருப்பதாக இயக்குனர் தெரிவிக்கிறார். பாலிவுட்டைச் சேர்ந்த ஆலன் அமீன், அனல் அரசு ஆகியோர் சண்டைப் பயிற்சி அளித்துள்ளனர். ஆக்சன் காட்சிகள் படத்தின் முக்கியமான ஹைலைட்டாக இருக்கும்.
வரும் வெள்ளிக்கிழமை வந்தே மாதரம் திரைக்கு வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.