மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பாஸ் என்கிற பாஸ்கரன் - மு‌ன்னோ‌ட்ட‌ம்

வாசன் விஷுவல் சென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயா‌ரித்திருக்கும் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்தப் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் முதலி‌‌ல் வாங்கியது. தற்போது இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரனை இயக்கியுள்ளார். தனது முதல் படத்தை போலவே இதையும் நகைச்சுவையாக உருவாக்கியுள்ளது படத்தின் ப்ளஸ்களில் ஒன்று. படத்தின் நாயகன் ஆர்யா மட்டுமின்றி நாயகி நயன்தாராவும் இந்தப் படத்தில் காமெடிக் காட்சிகளில் கலக்கியுள்ளார்.

சிவா மனசுல சக்தி படத்தில் காமெடிப் போர்ஷனை கவனித்துக் கொண்ட சந்தானம் இதிலும் உண்டு. அவரும் ஆர்யாவும் இணைந்து நயன்தாராவை கலாய்க்கும் காட்சிகள் அனைவ‌ரின் வயிறையும் பதம் பார்க்கும் என்றார் இயக்குனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் நா.முத்துக்குமார்.

வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.