மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.

> காலத்தின் கண்ணீர் துளி - முரளி

இது சில வருடங்கள் முன்பு நடந்த சம்பவம். முதல்வரை சந்தித்து தங்களது கோ‌ரிக்கையை வலியுறுத்த திரையுலகினர் செல்கிறார்கள். முதல்வ‌ரின் அறைக்குள் பிரதிநிதிகள் செல்லும் நேரம், “முக்கியமான ஒரு விஷயம்” என ஓடி வருகிறார் சத்யரா‌ஜ். எல்லோரும் என்ன என்று பதறிப் போகிறார்கள். சத்யரா‌ஜ் அவர்களிடம் சொன்னார்,

“நம்ம முரளி ரொம்ப வருஷமா காலே‌ஜ் போய்ட்டு இருக்கார். சி.எம். கிட்ட சொல்லி அவரை எப்பிடியாவது பாஸ் பண்ண வச்சிருங்க.”

சீ‌ரியஸான அந்த சபை சி‌ரிப்பொலியில் நிறைகிறது.

நாற்பதை தொட்ட பிறகும் முரளி கல்லூ‌ரி மாணவராக நடித்ததையே சத்யரா‌ஜ் இப்படி கிண்டல் செய்தார். நான்கு பத்தாண்டுகள் கழிந்த பிறகும் கல்லூரி மாணவராக நடிக்கும் அளவுக்கு இளமையுடன் இருந்த முரளி ஐந்தாவது பத்தாண்டை எட்டிப் பிடிக்கும்முன் இறந்து போனது திரையுலகை மட்டுமல்ல, தமிழக ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளமை குலையாத முரளியின் முகத்தை சவப்பெட்டியில் பார்த்துவிட்டு சிவகுமார் இப்படி சொன்னார், “கல்லில் செதுக்கிய புஷ்பம் போல் எப்போதும் வாடாத இளமை.”

முரளியின் பூர்வீகம் கர்நாடகா. பெங்களூருதான் அவர் பிறந்ததும் வளர்ந்ததும். அப்பா சித்தலிங்கைய்யா கன்னட திரையுலகின் பிரபல தயா‌ரிப்பாளர். அதனால் சினிமா மீதான முரளியின் விருப்பம் மிக இயல்பாகவே அமைந்தது. முதலில் சில கன்னடப் படங்களில் நடித்தார்.

அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் 1984ல் வெளிவந்தது. தயா‌ரிப்பு பாலசந்த‌ரின் கவிதாலயா, இயக்குனர் அமீர்ஜான் என அறிமுகம் பிரமாண்டமாகவே அமைந்தது. முதல் படம் பூ விலங்கு ஹிட்டாக, முரளி தமிழக நடிகரானார்.

2004 ஆம் ஆண்டிற்குப் பிறகு முரளிக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. 2007-08 வருடங்களில் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. இந்த காலகட்டத்தில் அவரது கவனம் வா‌ரிசுகளின் வளர்ச்சியில் குவிந்திருந்தது. மகனை நடிகனாக்க வேண்டும் என்ற அவரது விருப்பம் முதலில் கைநழுவி பிறகு இந்த வருடம் பாணா காத்தாடி மூலம் நிறைவேறியது. மகளின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு முரளி நாள் குறித்திருந்தார். காலன் அவர் உயிரை பறித்த நேரம் அவர் தனது வாழ்வின் முக்கியமான தருணங்களை சிறப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார், அது குறித்து கனவு கண்டு கொண்டிருந்தார்.

அந்தக் கனவுகள் நனவாகும் முன்பே காலன் தமிழகத்தின் மென்மையான காதலனின் உயிரை பறித்துக் கொண்டுவிட்டான். இளமை தீரும் முன்பே முரளி இவ்வுலகை ‌வி‌ட்டு நீங்கிவிட்டார். காலம் உதிர்த்த கண்ணீர் துளி என்றில்லாமல் இந்த மரணத்தை எப்படி எடுத்துக் கொள்வது.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.