மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நயன்தாரா - சேலை விளம்பரத்தில்.

ஒருபோதும் விளம்பரங்களில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நயன்தாரா இப்போது சென்னையில் இருக்கிறார். அவர் வந்திருப்பது சென்னை சில்க்ஸின் சேலை விளம்பரத்தில் நடிக்க.

நயன்தாராவை தமிழகத்தில் பார்த்தால் என்ன வேணும்னாலும் செய்வோம் என்று மகளிர் சங்கங்கள் முஷ்டி மடக்கி நிற்கின்றன. (மனைவியை விவகாரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யும் மற்றவர்களை இந்த சங்கங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? ரமலத்தைப் போல் எத்தனை நூறு பெண்கள் அவதிப்படுகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இந்த சங்கங்கள் குரல் கொடுக்காதது எதனால்? விளம்பரம் கிடைக்காது என்பதாலா? இல்லை ரமலத்தின் துயரம் மட்டும்தான் காவியத்தன்மை வாய்ந்ததா?)

இந்த நெருக்கடி காரணமாக தனியார் பாதுகாப்புடன்தான் வெளியவே செல்கிறார் நயன்தாரா. படப்பிடிப்புக்கு செல்லும் போதும் இந்த பாதுகாப்பு உண்டு.

ச‌ரி, விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர் திடீரென மனசு மாற என்ன காரணம்?

மூன்று நாள் ஷூட்டிங்கிற்கு 1 கோடி தர சம்மதித்தார்களாம். இது நயன்தாரா இரண்டு படத்தில் சம்பாதிக்கும் காசு. புத்திசாலித்தனமான ஜட்‌ஜ்மெண்ட்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.