மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிம்பு - தனுஷுடன் நடிக்க‌த் தயார்.

சிம்புவின் அடுத்தப் படம் வானம். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்தில் நடித்த அனுஷ்கா இதிலும் நடித்திருக்கிறார்.

இதுபற்றி கூறிய சிம்பு, நான் அனுஷ்காவின் ரசிகன், அவர் நடித்த அருந்ததியைப் பார்த்து அப்படியே அசந்துட்டேன் என்றார். அனுஷ்காவை பிடிக்கும் என்பதாலேயே வானத்தில் அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார்.

இவர்கள் தவிர வேகா, பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ரா‌ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். வேதத்தை இயக்கிய கி‌ரிஷ் வானத்தையும் இயக்கியுள்ளார். இசை யுவன் ஷங்கர் ராஜா. செல்வராகவனுடனான திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரத்துடன் நடித்தது பற்றி குறிப்பிட்ட சிம்பு, எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க‌த் தயார். தனுஷுடன் நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.

வானம் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. போஸ்ட் புரொட‌‌க்சன் வேலைகள் நடந்து வருகின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.