மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ருதிஹாசன் மலையாளத்தில் ???

நடிப்பது என்பதில் உறுதியாகியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். எந்த மொழி என்றில்லை, எல்லா மொழிகளிலும் நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

இந்தி, தமிழ் அடுத்து தெலுங்கு என குறுகிய காலத்திலேயே மூன்று மொழிகளில் கால் பதித்துவிட்டார் ஸ்ருதி. நான்காவதாக இவரது காலடி பதியப் போவது சேர மண்ணில் என்கின்றன செய்திகள்.

1989ல் சாணக்கியன் மலையாளப் படம் மூலம் இயக்குனரானவர் டிகே ரா‌‌ஜீவ் குமார். சாணக்கியனில் ஹீரோவாக நடித்தவர் கமல்ஹாசன். ஆன்றிலிருந்து கமலும், ரா‌ஜீவ் குமாரும் நல்ல நண்பர்கள்.

ரா‌‌ஜீவ் குமார் தற்போது த‌ல்சமயம் ஒரு பெண்குட்டி என்ற மலையாளப் படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிப்பதற்காக அவர் ஸ்ருதிஹாசனை அணுகியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

7ஆம் அறிவு படத்தில் பிஸியாக இருக்கும் ஸ்ருதி இதுவரை பதில் எதுவும் சொல்லவில்லை. கதையும், கேரக்டரும் பிடித்திருந்தால் கண்டிப்பாக நடிப்பார் என்று மட்டும் அவரைச் சார்ந்தவர்கள் நம்பிக்கை தெ‌ரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.