
5. வல்லக்கோட்டை
தீபாவளிக்கு வெளிவந்த வல்லக்கோட்டை தனது முதல் மூன்று நாள் வசூலிலேயே தகர்ந்துவிட்டது பெரும் சோகம். ஏ.வெங்கடேஷின் இந்தப் படம் ஆக்சன் கிங் இருந்தும் பாக்ஸ் ஆஃபிஸில் பணாலானது ஆச்சரியமே. இதன் முதல் மூன்று நாள் சென்னை வசூல் 11.13 லட்சங்கள்.
4. எந்திரன்
ஷங்கர், ரஜினி, ரஹ்மான் காம்பினேஷனில் வந்திருக்கும் எந்திரன் தனது ஐந்தாவது வாரம் வரை சென்னையில் மட்டும் 15.8 கோடிகளை வசூலித்துள்ளது. இது தமிழ் சினிமா சரித்திரத்தில் மிகப் பெரிய சாதனை. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல், 26.2 லட்சங்கள்.
3. மைனா
தீபாவளிப் படங்களில் சிறந்த படம் என பாராட்டப்படும் மைனா முதல் மூன்று தினங்களில் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது. ரசிகர்கள், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டுவதால் மைனா முதல் இடத்துக்கு தாவும் சாத்தியம் அதிகமுள்ளது. இதன் முதல் மூன்று நாள் வசூல், 37 லட்சங்கள்.
2. வ - குவாட்டர் கட்டிங்
மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்து அதைவிட அதிக ஏமாற்றத்தை அளித்திருக்கும் படம் வ - குவாட்டர் கட்டிங். படத்தில் நடித்தவராலேயே பைத்தியகாரத்தனமான படம் என புகழப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல், 43.2 லட்சங்கள்.
1. உத்தமபுத்திரன்
தீபாவளிக்கு வெளிவந்த சுமாரான படங்களில் இதுவும் ஒன்று. தனுஷ் நடித்திருப்பதால் படத்துக்கு அமோகமான வரவேற்பு. இது இனிவரும் நாளில் தொடருமா என்பது சந்தேகமே. இதன் முதல் மூன்று நாள் வசூல், 59.4 லட்சங்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.