
சுந்தர் சி. இயக்கிய கிரி, வின்னர் படங்களாகட்டும், நடித்த தலைநகரமாகட்டும்... இவை வெற்றி பெற்றதற்கு கதையைவிட, ஆக்சனைவிட, காதலைவிட வடிவேலுவின் காமெடிதான் காரணம். சின்ன மனஸ்தாபத்தில் இருவரும் பிரிந்த பிறகு வடிவேலுவின் இடத்தை விவேக் பிடித்துக் கொண்டார்.
ஆனால் வடிவேலுவின் காமெடிக்கு முன்னால் விவேக்கின் மிமிக்ரி காமெடி எடுபடவில்லை. இது சுந்தர் சி-யின் படங்களின் ரிசல்டிலும் எதிரொலித்தது. இதனால் மீண்டும் வடிவேலுவுடன் சமரசமாகியிருக்கிறார்.
இவர் இயக்கி ஹீரோவாக நடித்துவரும் நகரம் மறுபக்கத்தில் வடிவேலுதான் காமெடி. தலைநகரத்தில் நாய் சேகராக வந்த வடிவேலுக்கு சுந்தர் சி. இந்தப் படத்தில் தந்திருக்கும் நாமகரணம், ஸ்டைல் பாண்டி.
வடிவேலுவின் ரிட்டர்ன் காரணமாக நகரம் சிகரமாகும் என நம்பிக் கொண்டிருக்கிறார் சுந்தர் சி.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.