மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிக்குபுக்கு ‌ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

ஆர்யா, ஸ்ரேயா நடித்திருக்கும் சிக்குபுக்கு படத்தின் ‌ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திரைக்கு வரும் ஆர்யாவின் அடுத்தப் படம் சிக்குபுக்கு. ஆர்யாவுடன் முதல் முறையாக ஸ்ரேயா ஜோடி சேர்ந்திருக்கிறார். மறைந்த இயக்குனர் ‌ஜீவாவின் அசோஸியேட் மணிகண்டன் படத்தை இயக்கியுள்ளார்.

ரொமான்டிக் காமெடியான இந்தப் படம் வரும் 19 ஆம் தேதி வெளியாவதாக முன்பு கூறப்பட்டது. தற்போது சில காரணங்களால் ‌ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

அடுத்த மாதம் மூன்றாம் தேதி சிக்குபுக்கு திரைக்கு வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.