மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 3 இடியட்ஸ் டிசம்பர்.5 முதல்.

டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் 3இடியட்ஸின் தமிழ், மற்றும் இந்தி ‌ரிமேக்கை தொடங்குகிறார் ஷங்கர். படப்பிடிப்பு எந்த இடத்தில் நடைபெற இருக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை என்கின்றன செய்திகள்.

3இடியட்ஸின் தமிழ் ‌ரிமேக்கில் விஜய், ஆர்யா, ‌‌ஜிவா நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு அமீர் நடித்த வேடத்தில் நடிக்கிறார். மற்ற இரு வேடங்களில் தமிழில் நடிக்கும் ஆர்யா, ‌‌ஜிவாவை பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

தனது மற்ற படங்களைவிட இதில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளார் ஷங்கர். தமிழின் முன்னணி காமெடி நடிகர்கள் சிலர் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

விஜய்யை தவிர்த்து மற்ற அனைவரையும் தமிழ், தெலுங்கு இரு பதிப்பிலும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதில் ஹீரோயின் இலியானாவும் அடக்கம். ஆர்யா, ‌‌‌‌‌‌ஜீவா, தமிழ் காமெடி நடிகர்கள் என தெலுங்கிலும் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினால் ஆந்திர ரசிகர்களுக்கு தமிழ் டப்பிங் படத்தைப் பார்க்கும் எபெக்ட்தானே கிடைக்கும் என்று மகேஷ்பாபு தரப்பு முணுமுணுக்கிறது.

டிச.5 க்குள் இந்த முணுமுணுப்புக்கு ஷங்கர் முற்றுப்புள்ளி வைப்பார் என அனைவரும் நம்புகிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.