தென்னிந்தியாவின் காஸ்ட்லி நடிகை யார்? த்ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் போட்டியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் இலியானா.
கேடி படத்தில் அறிமுகமான இந்த உடுக்கு இடையழகியை தமிழ் சினிமா கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாக தெலுங்கில் பிரபலமான பிறகு இவர் தமிழை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள் அழைத்தும் தமிழுக்கு கால்ஷீட் தர இலியானா தயாராக இல்லை.
இந்நிலையில் விக்ரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். துரதிர்ஷ்டவசமாக பட வேலைகள் தள்ளிப் போக, இலியானாவின் கால்ஷீட்டை பயன்படுத்த முடியாத நிலை. இப்போது அவருக்குப் பதில் அமலா பாலை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஷங்கர் இயக்கும் 3இடியட்ஸ் ரிமேக்கில் இலியானாதான் ஹீரோயின். தமிழில் விஜய் ஜோடியாகவும் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாகவும் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம், ஒன்றரை கோடி. மற்ற நடிகைகளுக்கு ஒரு கோடிக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.