விருதகிரி படத்தை ரொம்பவும் நம்பிக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த. படத்தை எப்படியும் ஐம்பது நாள் ஓட்டியாக வேண்டும் என்ற முனைப்பில் தொண்டரடிகள் இப்போதே வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டன.
விருதகிரி விஜயகாந்தின் முதல் இயக்குனர் அவதாரம். ஆனால் கதையில் விசேஷமில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி சவாலான கேஸை கண்டுபிடிக்கிறார். விஜயகாந்தின் பத்துப் படங்களில் எட்டின் கதை இதுதான்.
படத்தில் நடிப்பவர்களிலும் பெரிய மாற்றமில்லை. அருண்பாண்டியன், மன்சூர் அலிகான் என வழக்கமான விஜயகாந்த் பட நடிகர்கள்தான் இதிலும். ஆனால் வில்லனை மட்டும் பாங்காங்கிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
விஜயகாந்தின் படங்களில் கிளைமாக்ஸில் விஜயகாந்தும் வில்லனும் தனியாக மோதுவார்கள். முதலில் வில்லனிடமிருந்து உதை வாங்கும் விஜயகாந்த் குற்றுயிரும் குலையுருமாக ஆன பிறகு வில்லன் செய்த அட்டூழியங்களை நினைத்துப் பார்ப்பார். அப்போது அவரது கண்கள் சிவக்கும், கன்னம் துடிக்கும். அதன் பிறகு வில்லனுக்கு சனி திசை. எகிறி எகிறி வில்லனை பந்தாடுவார்.
இந்த கிளைமாக்ஸ் பைட்டுக்காகதான் பாங்காங் வில்லனை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.